30 May 2014

சேகுவாரா

சேகுவாரா....






சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (ஜூன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர்மருத்துவர்மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.
பெயர்
சே என்பது வியப்புச்சொல் ஆகும். இச்சொல்லை அர்சென்டீனர்கள், குவேரனி இந்தியர்களிடமிருந்து பழகினர் என்பர். அவ்விந்தியர், எனது என்ற பொருளில் பயன்படுத்துவர் என்று மானுடவியல் அறிஞர் கூறுவர்.ஆனால், தென்னமரிக்கப் பாம்பாஸ் புல்வெளியினருக்கு, ஆச்சரியம்ஆனந்தம்வருத்தம்நாணயம்அட்சேபம்அங்கீகாரம் போன்ற பல மானுட உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல்லாக அமைகிறது. இடத்திற்கு ஏற்பவும், ஒலிப்புக்கு ஏற்றவாறும் அச்சொல் பயனாகிறது.
இச்சொல்லின் மீதுள்ள பற்றால், கியூபா புரட்சியாளர்கள், 'சே' என்று செல்லமாக அழைத்தனர். அவரது பெற்றோர்அவரை 'டேட்டிஎன்று செல்லமாக அழைப்பர்.
மார்க்சியத்தில் ஈடுபாடு
கியூபாவில் புரட்சி
சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர்கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.
பொலிவியாவில் சே குவேரா
பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் ஒக்டோபர் 9, 1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்குபற்றியவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படிசட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது).
அவரது மரணத்தின்பின்சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார். சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது.
அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் பேசின் நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும்அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது.
பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது. (ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார்.
தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல் வெளியாயிற்று !!!! மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்.)
இளமைக்காலம்
சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் அர்கெந்தீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். இசுபானியபாஸ்க்குஐரிசிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும்ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால்ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.
வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த "ரக்பி" விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை "பூசெர்" என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன்மிக அரிதாகவே இவர் குளிப்பதால்இவருக்கு "பன்றி" என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.
தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும்பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடாகீட்ஸ்மாச்சாடோலோர்க்காமிஸ்ட்ரல்வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.
குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ், போல்க்னர், கைடே, சல்காரி,வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா, காமுஸ், லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ்,புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.
அவரது வயது அதிகரித்த போதுஅவருக்கு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா, அலெக்ரியா, இக்காசா, டாரியோ, ஆஸ்டூரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள்வரைவிலக்கணங்கள்மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர், அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்புதேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேராஅவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.
கல்வி
948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டுஅவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்ததொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர்2004 இல்இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம்[1]விருதுகளையும் பெற்றது.அப்படத்தின் சில பகுதிகளை இங்கு காணலாம்.
பரவலான வறுமைஅடக்குமுறைவாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும்மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில்இவர்இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.
பயணங்கள்
1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேராஇம்முறை பொலீவியா, பெரு, ஈக்குவடோர், பனாமா, கொஸ்தாரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டூராஸ், எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.
குவாத்தாமாலா நகரில்சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும்இடதுசாரிச் சார்புள்ளஅமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும்கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்திலேயே "சே" என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. "சே" என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்.

சேகுவேரா வாழ்க்கை வரலாறு: சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்.

சேகுவேரா:

பலப்பல கேள்விகள் அவரது வானத்தில் வல்லூறுகளாய்ப் பறந்தன. இந்தக் குழப்பமான சூழ்நிலையில்தான் 'சே' & காஸ்ட்ரோ சந்திப்பு!
ஒரு மகத்தான வீரனை தனக்குள் இணைத்துக் கொண்ட தருணத்திலிருந்து கியூபா அரசியலில் எவருக்கும் அறியாத பரிணாம மாற்றங்கள் நிகழத்துவங்கின. வரைபடங்கள் விரிக்கப்பட்டன.புரட்சிக்கான திட்டங்கள் வரையறுக்கப்பட்டன.
பயிற்சி முழுவதுமாக முடிவடைந்த வீரர்கள் முழுமையாக கெரில்லாக்களாக மாறியிருந்தனர்புரட்சிக்கான நாள் குறிக்கப்பட்டது. இம்முறை காஸ்ட்ரோவின் கண்களில் நம்பிக்கை ஒளி தெரிந்தது.தனது கனவுகளை நிறைவேற்ற காலம் ஒரு மகத்தான வீரனைப் பரிசளித்திருக்கிறது எனும் நம்பிக்கை.
அப்போது 'சே'வுக்கு வயது 27. காஸ்ட்ரோவுக்கு 32. காஸ்ட்ரோவுக்காவது கியூபா தன் சொந்த நாடுபோராடிய வேண்டிய அவசியம் இயல்பானதுஆனால் 'சே'வுக்கு அப்படி அல்லதனக்கு முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தில்அம்மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து ஆயுதம் எடுப்பதென்பதுஉலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந் திராத ஒன்று.இதனால்தான் 'சேமனிதருள் மாமனிதராக அடையாளம் காணப்பட்டார்.
'கால்கள்தான் என் உலகம்என 'சேஒருமுறை தன் நண்பர் ஆல்பர்ட்டோவிடம் கூறியிருந்தார்'என் கால்கள் பதியக்கூடிய பெருவெளி அனைத்தும் எனதுஅதில் வாழும் அனைவரும் என் சகோதரர்கள்எனும் பேருண்மையை அர்த்தப்படுத்தும் வாசகம் இதுஇதனால்தான் காஸ்ட்ரோவிடம், 'கியூபாவுக்கு விடுதலை கிடைக்கும் வரைதான் நான் உங்களுடன் இருப்பேன்அதன்பின் நான் என் பயணத்தைத் தொடர்ந்துவெவ் வேறு இடங்களுக்குச் சென்றுவிடுவேன்என அழுத்தமாகக் கூறியிருந்தார் 'சே'. காஸ்ட் ரோவும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஏறக்குறைய ஒன்றரை வருட கடுமையான ஆயுதப் பயிற்சிக்குப் பிறகு 1956, நவம்பர் 26&ம் தேதி இரவு மெக்ஸிகோ கடற்கரையில், 82 போராளிகள் ஒருவர் பின் ஒருவராக ஏறிக்கொண்டபின்விடுதலையின் பாடலை முழங்கியபடி,கிரான்மா எனும் படகு கியூபாவை நோக்கிப் பயணித்தது.
1957, ஜனவரி 17&ம் தேதிதளபதி லா பிளாட்டோ கொல்லப்பட்டதன் மூலம் புரட்சியாளர்களின் முதல் வெற்றிச் சங்கொலி கியூபாவில் எதிரொலித்தது. அன்று துவங்கி மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக நடந்தது கெரில்லா யுத்தம். துவக்கத்தில் குழுவில் மருத்து வராகவும் லெஃப்டினென்ட்டாகவும் இடம்பெற்ற 'சே', தன் திறமைதுணிச்சல்மதிநுட்பம் ஆகியவற்றால் காஸ்ட்ரோவுக்கு அடுத்தநிலையிலிருந்து படைகளை வழி நடத்தினார்அவரது திறமை கண்டு வியந்த சக கியூபா வீரர் கள் அவரை பிரியத்துடன் 'சேஎன அழைத்தனர்கடுமை யான ஆஸ்துமா துன்புறுத் தியபோதிலும்,அடர்வனங் களிலும் மலைகளிலும் சளைக்காமல் வீரர்களுக்குத் தெம்பூட்டியபடி படையை வழி நடத்தினார் 'சே'.
''சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லைஎன் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள்தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்'' போன்ற அவரது வாசகங்கள்களத்தில் வீரர்களுக்கு மில்லியன் மெகா வாட் மின்சாரத்தைப் பாய்ச்சி சீற்றம் கொள்ளவைத்தனயுவேராவில் நடைபெற்ற யுத்தத்தில், 53 ராணுவத்தினரை வெறும் 18 கெரில் லாக்களைக் கொண்டுவீழ்த்தியதுதான் 'சே'வின் வீரத்தை கியூபாவுக்கு வெளிச்சமிட்டதுபின் தொடர்ந்த ஆண்டுகளில் வெவ்வேறு நிலைகளில் புரட்சிப்படைபாடிஸ்டா அரசை முழுவதுமாக விரட்டியடித்தது.
1958 ஆகஸ்ட் மாதத்தில்புரட்சிப் படை தலைநகர் ஹவானாவுக்குள் ஊடுருவியது. கியூபா முழுவதும் காஸ்ட்ரோவின் வசமானதுவரலாற் றுச் சிறப்புமிக்க இந்தக் கெரில்லா யுத்த வெற்றிஉலகின் அனைத்து நாடு களையும் வியப்பில் ஆழ்த் தியது'டைம்இதழ் 'சேஅட்டைப்படத்துடன் 'புரட்சி யின் மூளை'யென கட்டுரை எழுதியது.
1959, பிப்ரவரி 16&ல் கியூபாவின் பிரதமராக காஸ்ட்ரோ பதவியேற்றவுடன்விவசாயத் துறையில் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார் 'சே'. தேசிய வங்கியின் தலைவராக கியூபா ரூபாய் நோட்டுகளில் 'சேஎன கையெ ழுத்திடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார்பின் தொழிற்துறை அமைச் சராகவும் 'சேபதவி வகித்தார்இருந்தாலும் 'சேதன்னை ஒரு சாதாரணக் குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார்விவசாயக் கூலிகளுடன் சேர்ந்து கரும்பு வெட்டுவதும்தொழிற் சாலைகளில் இதர பணியாளர்களுடன் சேர்ந்து மூட்டை சுமப்பதுமாகவே வாழ்ந்தார்'சேமற்றும் காஸ்ட்ரோ இருவருக்குமிடையே யுத்தத்துக்கு முன்பும் பின்புமான உறவுகளில் வேறுபாடுகள் இருந்தது என்றாலும்ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்ததில்லை.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதி யாகஒற்றை மனிதனாகத் தன்னால் வேரறுக்க முடியும் என 'சேதிடமாக நம்பினார்.
கியூபாவுக்கு ஏவுகணைகள் இறக்குமதி செய்ய ரஷ்யா வாக்குறுதி தந்தபோது, ''ரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால் அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும்'' எனத் தைரியமாகக் குரல் கொடுத்தார்அமெரிக்காகியூபாவின் மீது விதித்த பொருளாதாரத் தடைதான் அவரது இந்தக் கட்டற்ற கோபத்துக்குக் காரணம்அமெரிக்காவின் சி.பி.என்தொலைக்காட்சிஒருநேர்காணலுக்காக சேகுவேராவை நியூயார்க்குக்கு அழைத் தது''அமெரிக்கா ஒரு கழுதைப் புலிஅதன் ஏகாதிபத்தியத்தை நான் வேரறுப் பேன்'' என அமெரிக்க மண்ணிலேயே துணிச்சலாகப் பேட்டி தந்தார் 'சே'.
சே குவேராவுக்கு முடிவுரை எழுதக் களத்தில் இறங்கியது அமெரிக்க உளவு நிறுவனமான சி..!
சி.....
உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன் சுடப்பட்டு கீழே விழுவான்அவனை யார்எங்கிருந்துஎதற்காகச் சுட்டார்கள் என எதுவும் தெரியாதுஆனால்அவனைச் சுட்ட துப்பாக்கியின் மிச்ச புகைஅமெரிக்காவில் கசியும்உலக வரைபடத்தில் இந்த ஓநாயின் காலடி படாத இடமே இல்லை.
'சே'வின் அமெரிக்கப் பயணமும்அமெரிக்க எதிர்ப்புப் பேச்சும் சி..&வுக்கு சினமூட்டினஅதுவரை காஸ்ட்ரோவை குறிவைத்து இயங்கிய சி..தன் முழு எரிச்சலையும் 'சே'வின் பக்கம் திருப்பியதுகாஸ்ட்ரோவைக் காட்டிலும் 'சே'தான் மிகவும் ஆபத்தானவர் என இலக்கு தீர்மானிக்கப்பட்டது.
விழும் இடமெல்லாம் விதைபோல விழுவதும்எழும் இடமெல்லாம் மலை போல எழுவதுமாக இருந்த 'சே', சதித் திட்டம் குறித்து அறிந்தும் புன்னகைத்தார். தொடர்ந்து சீனாவுக்கும் அல்ஜீரியாவுக்குமாக தன் பயணங்களைத் தொடங்கினார். சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
ரஷ்யாவையும் ஒரு பிடி பிடித்தார்அமெரிக்காவால் பாதிக்கப்படும் மூன்றாம் உலகக் குட்டி நாடுகளுக்கு ரஷ்யா பொருளாதாரரீதியாகப் பாதுகாப்-பளிக்க வேண்டி-யது அதன் தார்மிகக் கடமை என முழங்கினார்தொடர்ந்து தான்சானியாகானாகாங்கோ போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பயணம் தொடர்ந்தது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் அடக்குமுறை சர்வாதி-காரத்தாலும் ஆப்பிரிக்க மக்கள் அவதிப்படுவதை நேரடியாக உணர்ந்தார்குறிப்பாக காங்கோவின் அரசியல் சூழல்அவரை மிகவும் பாதித்ததுமக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
மூன்று மாத & கியூபா அரசால் அங்கீ-கரிக்கப்படாத &பயணத்துக்குப் பிறகு, 'சே' 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை ஃபிடல் காஸ்ட்ரோ கை குலுக்கி வரவேற்றார்.அதுதான் வெளியுலகுக்கு 'சேநேரடியாக
வெளிப்பட்ட கடைசி நிகழ்வு
அன்றிரவு ஒரு சந்திப்பில்காஸ்ட் ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ, 'சே'வை டிராஸ்கியிஸ்ட் என சுடு சொல்லால் அழைத்ததாகவும்அது 'சே'வின் மனதை மிகவும் காயப் படுத்தியதாகவும்அதுதான்'சேகியூபாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப் படுவதுண்டு.
'சே எங்கே?' பத்திரிகைகள் அலறினஅனைவரது பார்வையும் காஸ்ட்ரோ பக்கம் திரும்பியது'சே'வை சுட்டுக் -கொன்றுவிட்டார் காஸ்ட்ரோ எனுமளவு கோபம் கிளம்பியதுகாஸ்ட்ரோவின் மௌனம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.
சே காஸ்ட்ரோ இருவருக்கு-மிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியது உண்மைஅடிப்படை-யில் 'சேஒரு யதார்த்தவாதிஉள்ளது உள்ளபடியே போட்டு உடைக்கிற செயல் புயல்காஸ்ட்ரோ ஒரு ராஜதந்திரிஅரசியல்பூர்வமாகக் காய்களை நகர்த்துபவர்'யாதும் ஊரேயாவரும் கேளிர்என்பது 'சே'வின் உலகம். ஆனால்கியூபாவையும் அதன் மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்புகாஸ்ட்ரோவுக்குஇருவருக்கு மிடையிலான முரண்கள் அனைத்துக்கும் இந்த வேறுபாடுகளே அடிப்படை!
உண்மையில் 'சேஅப்போது காஸ்ட்ரோவுக்கும்அவரது தாய்க்-கும் ஒரு கடிதத்தை எழுதி அனுப்பி-விட்டு தனது அடுத்த புரட்சிக்காக காங்கோ கிளம்பி இருந்தார்காஸ்ட்ரோ எவ்வளவோ முயற்சித்தும் 'சே'வை நிறுத்த முடியவில்லை'மக்களுக்கான பணியில் தனது பாதை தொடர்ந்து நீளும்அதனை ஒருபோதும் தடுக்கக் கூடாதுஎன 'சேகாஸ்ட்ரோவிடம் உறுதிமொழிவாங்கியிருந்ததும் அதற்கு ஒரு காரணம்.
'சே எங்கே?' எனக் கேட்ட யாருக்கும் காஸ்ட்ரோவால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியவில்லைகாரணம்சி..!
'சே'வை அழித்தொழிக்கத் தேடி வரும் சி..&வுக்கு துப்பு கிடைத்து விடக்கூடும் என காஸ்ட்ரோ அஞ்சியதே காரணம்வியட்நாமுக்கு 'சேசென்று விட்டதாக காஸ்ட்ரோ சொன் னதை நம்பி,வியட்நாம் காடுகளில் 'சே'வை சி..ஏ தேடி அலைந்து ஏமாற்றமும் எரிச்சலும் அடைந்ததுஅந்தக் கடுப்பில், 'சே'வை காஸ்ட்ரோ சுட்டுக் கொன்றதற்கு தங்களிடம் ஆதா ரங்கள் இருப்பதாகப் பொய்ச் செய்தியைப் பரப்பத் தொடங்கியதுஇது காஸ்ட்ரோவுக்கு மிகவும் நெருக்கடியை உருவாக்கவேறு வழி இல்லாமல் அக்டோபர் 3, 1965&ல்பொதுமக்கள் முன்னிலையில் 'சேதனக்கு எழுதிய கடிதத்தை அவரது அனுமதியுடன் பகிரங்கமாக வெளியிட்டார் காஸ்ட்ரோகடிதத்தில் 'சேகியூபாவை விட்டு தான் வெளியேறியதற்கான காரணத்தையும்காங்கோ புரட்சிக்குச் செல்வதையும்குறிப்பிட்டி ருந்தார்.
'சே', காங்கோ காடுகளில் துப்பாக்கியுடன் களத்தில் இருந்தார். கியூபா வீரர்கள் மற்றும் கறுப்பினப் போராளிகளுடன் காங்கோவின் சர்வாதிகார அரசை வேரறுக்கும் பணியில் இறங்கியிருந்தார்.ஆனால் அவர் நினைத்ததுபோல்அந்த புரட்சி 'சே'வுக்கு வெற்றி தேடித் தரவில்லைகாங்கோ நாட்குறிப்புகள் எனும் டைரியில் எழுதியிருந்தது போலஅது ஒரு தோல்வியின் வரலாறாக முடிந்தது.
அமெரிக்க சி..கழுகுகள் அவரைத் தேடி காங்கோ காடுகளுக்குள் புகுந்தபோது, 'சேதன் பட்டாளத்துடன் செக்கோஸ் லோவியாவுக்கு இடம்பெயர்ந் திருந்தார்.
'சே'வுக்கு மீண்டும் கியூபா செல்ல விருப்பம் இல்லைபொலிவிய மாவோயிஸ்ட் தலைவரான மோஞ்சேவின் அழைப் பின் பேரில்தன் அடுத்த இலக்கான பொலிவியாவுக்குள் 1966 இறுதிவாக்கில் மாறுவேடத்தில் நுழைந்தார்அவருடன் 50 பேர் கொண்ட கெரில்லாப் படையும் புனிதப் பணியில் ஈடுபட்டதுஆனால்அங்கேயும் அவருக்கு காங்கோவைப் போல தோல்வியே காத்திருந்தது.
தட்பவெப்ப சூழ்நிலைகளின் முரண்கலாசாரப் புரிதலின்மை போன்றவையே அவரது திட்டங்களின் தோல்விகளுக்குக் காரணம்இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தன் அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோஅவர்கள் யாரும் உதவி செய்யாமல்மௌனமாகக் கைகட்டி வேடிக்கை பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்றுஇந்த மனவேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து 'சே'வை வாட்டி வதைத்ததுபோதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்னைகளுடன் 'சேகாடுகளில் அலைந்தார்சி..பொலிவியாவுக்குள்ளும் புகுந்தது. பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் என்பவர் தலைமையில்வேட்டையாடத் தொடங்கியது.
1967 அக்டோபர் 8.... தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம்காலை 10.30... யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் 'சேகடந்து செல்கிறார்வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் குண்டுப் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.
நண்பகல் 1.30... அந்தக் குண்டுப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு 'சே'வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கிறாள்அலறிப் புடைத்துப் பறந்து வந்த பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கியால் சுடுகின்றனர்.
பிற்பகல் 3.30... காலில் குண்டடிபட்ட நிலையில்தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், ''நான்தான் 'சே'. நான் இறப்பதைக் காட்டிலும்உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்'' என்கிறார்.
மாலை 5.30... அருகிலிருந்த லா ஹிகுவேராவுக்கு வீரர்கள் கைத்தாங்கலாக 'சே'வை அழைத்து வருகின்றனர்அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் 'சேகைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார்.இரவு 7.00... 'சே பிடிபட்டார்என சி..&வுக்குத் தகவல் பறக்கிறதுஅதே சமயம், 'சேஉயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது.
தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், ''இது என்ன இடம்?'' என்று 'சேகேட்கிறார்பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற, ''பள்ளிக்கூடமா... ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?'' எனவருத்தப்படுகிறார்சாவின் விளிம்பிலும் 'சே'வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.
அக்டோபர் 9... அதிகாலை 6.00... லா ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்தபடி வந்து இறங்குகிறதுஅதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன் ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி..உளவாளி இறங்குகிறார்.
கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில்அழுக்கடைந்த ஆடைகளுடன் 'சே'வைப் பார்த்ததும்அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்பிடிபட்டிருப்பது 'சே'தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக் கிறது'சே'வின் டைரிகள் மற்றும்உடைமைகள் கைப்பற்றப்படுகின்றனதான் கொண்டுவந்த கேமராவில் 'சே'வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ்கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும்'சே'வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.
காலை 10.00... 'சே'வை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால்அது உலகம் முழுக்க அவர் மேல் பரிதாபத்தையும்நாயகத் தன்மையையும் உருவாக்கிவிடும் என்பதால்அவரை உடனடியாகத் தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி..&விடம் இருந்து தகவல் வருகிறது.
வாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500, 600 எனக் குறிச்சொற்கள் தாங்கி வருகிறது500 என்றால் 'சே'... 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.
காலை 11.00... 'சே'வைச் சுட்டுக் கொல்வது என முடிவெடுக்கப்படுகிறதுயார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது'மரியோ ஜேமிஎன்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அக்காரியத்துக்காகப்பணியமர்த்தப்படுகிறார்.
நண்பகல் 1.00... கைகள் கட்டப்பட்ட நிலையில், 'சே'வை பள்ளிக்கூடத்தின் மற்றொரு தனியிடத்துக்கு மரியோ அழைத்துச் செல்கிறார். ''முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!'' என்பார் 'சே'. ஆனால்மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத் தயாராகிறார்.
தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு 'சேகேட்கஅதை அலட்சியப்படுத்துகிறார்''கோழையேசுடுநீ சுடுவது 'சே'வை அல்லஒரு சாதாரண மனிதனைத்தான்!'' இதயம் கிழிக்கும் விழிகள் மின்னஉலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வாசகம் இதுதான்!
மணி 1.10... மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறதுஆறு தோட்டாக்களில் ஒன்றுஅவரது இதயத்துக்குள் ஊடுருவியதுஇனம்,மொழிதேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.
'சேஇறந்த தகவல் உலகத்தை உலுக்கியது.
அக்டோபர் 18.... கியூபா... ஹவானா-வில் வரலாறு காணாத கூட்டம் 'சே'வின் அஞ்சலிக்காக காஸ்ட்ரோவின் தலைமையில் கூடியிருந்ததுஅவர்கள் முன் தலைமை உரையாற்றுகிறார் காஸ்ட்ரோ.''வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்றுவிட்ட 'சேநம் காலத்தின் ஒப்பற்ற தலைவர்கியூபா மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும்'' என வேண்டுகோள் விடுக்கிறார்.
இறந்தபோது 'சே'வுக்கு வயது 40. உலகம் முழுக்க 'சே'வின் புகழ் இன்னும் இன்னும் பரவியதுஉலகின் அனைத்து இதழ்களிலும் 'சேகுறித்துக் கட்டுரைகள் எழுதப்பட்டனஉலகின் பெரும் கவிகளான ஆக்-டோவியா பாஸ்¨லியா கொத்சார் போன்றவர்கள் 'சேகுறித்து கவிதைகள் எழுதினர்பிரெஞ்சு அறிஞர் ழான் போல் சார்த்தர், 'பூமியில் வந்துபோன முழுமையான மாமனிதர் சே!என மகுடம் சூட்டினார்.
நிகரகுவாவில் புரட்சி ஏற்பட்டு குவேராயிசம் எனும் கொள்கைகொண்ட சான்டனி ஸ்டாஸ் அரசுஆட்சியைக் கைப்பற்றியதுஅதன் வெற்றி ஊர்வலத்தின்போது ஏசுவைப் போன்ற 'சே'வின் உருவம் கொண்ட அட்டைகளை அனைவரும் தாங்கிப் பிடித்தி ருந்தனர்.
கியூபா அரசாங்கம் 'சே'வின் நினைவைத் தொடர்ந்து சமூகத்தின் ஞாபகத்தில் பதியவைக்கும் விதமாக தனது கட்டடங்கள் மற்றும் பூங்காக்களில் சித்திரங்களாகவும்சிலைகளா கவும்பல்வேறு உருவ வேலைப்பாடு களாகவும் நிர்மாணித்து பெருமைப்படுத் தியதுசான்டா கிளாரா எனும் நகரில் 'சே'வின் மியூஸியம் ஒன்றும் உள்ளதுவருடந்தோறும் மில்லியன் கணக்கில் பயணிகள்வெளிநாடுகளிலிருந்து இந்த மியூஸியத்தைப் பார்ப்பதற்காக மட்டுமே கியூபாவுக்கு வந்து செல்கின்றனர்.
கியூபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டுஅதிகாலைகளில் வகுப்பறைகளுக்குச் செல்லும் முன்அத்தனை குழந்தைகளும் ஒருமித்த குரலில் முழங்குகிற வாசகம் என்ன தெரியுமா?
''ஆம்எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தனர். நாங்கள் 'சே'வைப் போல இருப்போம்!''

UR VALUABLE COMMENTS WILL INSPIRING ME MORE…… PLEASE COMMENTS UR THOUGHTS………

No comments:

Post a Comment

Welcome